வட அமெரிக்காவில் மாஸ் காட்டும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Kingdom Movie Collection: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் கிங்டம். இந்தப் படம் வெளிநாடுகளில் நேற்றே வெளியான நிலையில் வட அமெரிக்காவில் செய்த வசூல் சாதனை குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் கிங்டம். இயக்குநர் கௌதம் தின்னுரி (Director Gowtham Tinnanuri) இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda) நாயகனாக நடித்துள்ளார். இதுவரை நடித்துவந்த ரொமாண்டிக் ஆக்ஷன் காட்சிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதையை கொண்ட இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து இருந்தது ரசிகரக்ளிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து. முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் நிச்சயாமக ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை பாத்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் படம் சிறப்பாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு இந்தப் படத்தில் வேற மாதிரி மாஸாக உள்ளது என்று தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
வட அமெரிக்காவில் வசூலில் மாஸ் காட்டிய கிங்டம்:
இந்த நிலையில் வெளிநாடுகளில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் நேற்றும் 30-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியானது. நேற்று வெளிநாடுகளில் வெளியான படம் வசூலில் மாஸ் காட்டி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் வட அமெரிக்காவில் 8,50,000 டாலர்கள் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 7.44 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் வட அமெரிக்காவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூல் என்றால் இந்தியாவில் இன்றைய நாள் முடிவில் வசூல் எகிறி இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்றைய நாள் முடிவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… STR 49 படத்தின் புரோமோ வீடியோவை தியேட்டரில் வெளியிட திட்டமிடும் படக்குழு
கிங்டம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Crown it a BLOCKBUSTER already. 💥💥💥#kingdom North America premieres Gross 0K+ and counting…
it’s a MASS verdict from USA❤️❤️❤️
North America Release by @ShlokaEnts pic.twitter.com/bPkfaZKF2J
— Shloka Entertainments (@ShlokaEnts) July 31, 2025
Also Read… நோ ஓடிடி… நேரடியாக யூடியூபில் வெளியாகும் அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படம்