அதர்வாவின் தணல் படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விமர்சனம் – என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Thanal Movie: நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் காத்திருக்கும் படம் தணல். காவல்துறை அதிகாரியாக நடிகர் அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதர்வாவின் தணல் படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விமர்சனம் - என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

இயக்குநர் வெங்கட் பிரபு

Published: 

18 Sep 2025 15:14 PM

 IST

நடிகர் அதர்வாவின் (Actor Atharvaa) நடிப்பி தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் தணல். அதர்வா இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருந்த இந்தப் படத்தை ரவீந்திர மாதவா எழுதி இயக்கி இருந்தார். படம் கடந்த 12-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகை லாவண்யா திருபாதி நாயகியாக நடித்து இருந்தார். நடிகர் அஸ்வின் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷா ரா, செல்வா, பரணி, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, அழகம் பெருமாள், பாரத், போஸ் வெங்கட், தௌபிக், ஸர்வா பிரதீப் கே.விஜயன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான அன்னை ஃபிலிம் புரடெக்‌ஷன் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது கருத்தை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தியேட்டரில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம்:

தணல் படத்தைப் பார்த்தேன், ஒரு இரவு நேர பரபரப்பான த்ரில்லர் அதர்வா முரளி ஒரு பின்தங்கிய கதாநாயகனாக நடித்தார் அது புதுமையாக இருந்தது.
அஷ்வினும் வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா தனது சிறப்பான படைப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ள மற்ற குழுவினருக்கும் என்னுடைய பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வெங்கட் பிரபு அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… 800-வது எபிசோடில் மக்களின் பேராதராவைப் பெற்ற சிறகடிக்க ஆசை – கொண்டாட்டத்தில் சீரியல் குழு!