Retta Thala: அருண் விஜயின் ரெட்ட தல – முதல் பாடல் ரிலீஸ் எப்போது? வெளியான ப்ரோமோ!
Retta Thala First Single Update: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட படம்தான் ரெட்ட தல. இந்த படமானது வரும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படக்குழு முதல் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

நடிகர் அருண் விஜய்யின் (Arun Vijay) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகிறது. இவர் படங்களில் ஹீரோவாகவும், நெகடிவ் வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து வந்த படம்தான் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கிரிஷ் திருக்குமரன் (Kris Thirukumaran) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் 2024ம் ஆண்டு ஆரம்பமாகி, இந்த 2025ம் ஆனது பிப்ரவரி மாதத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி (Siddhi Idnani) நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் (Sam CS) இசையமைத்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. “கண்ணம்மா” என்ற இந்த முதல் பாடலானது வரும் 2025 செப்டம்பர் 19ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : தனி ஒருவன் 2 தாமதத்திற்கு காரணம் இதுதான் – மோகன் ராஜா பேச்சு!
ரெட்ட தல படக்குழு வெளியிட்ட முதல் பாடல் ப்ரோமோ மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :
SURPRISE INCOMING 💖@arunvijayno1 ‘s #RettaThala gets LOVE with the first single #Kannamma – PROMO OUT NOW!
Song from 19-09-2025
Produced By- @bbobby @BTGUniversal
Directed By- @KrisThiru1
A @SamCSmusic ‘s Musical@SiddhiIdnani @tseriessouth pic.twitter.com/WTNbEio9Lg
— BTG Universal (@BTGUniversal) September 16, 2025
ரெட்ட தல படத்தின் நடிகர்கள் :
இந்த படத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் சித்தி இத்னானி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவர்களுடன் நடிகர்கள் தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி மற்றும் பாலாஜி முருகதாஸ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறனர்.
இதையும் படிங்க : பராசக்தி பட டைட்டில் விவகாரம்… அதை கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல – விஜய் ஆண்டனி விளக்கம்!
இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன், காதல் மற்றும் கடத்தல் சார்ந்த கதைக்களத்துடன் தயாராகியிருக்கிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறுவடைந்திருக்கும் நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருந்த்து வருகிறது.
ரெட்ட தல படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வருகிறது. இந்த படத்தை படக்குழு வரும் 2025 அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.