வெளி நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி – வைரலாகும் பதிவுகள்!
Coolie Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் ரிலீஸ் வருகின்ற ஆகஸ்ட் மாதம் உள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியீட்டு உரிமை படு ஜோராக நடைப்பெற்றது. இந்த நிலையில் டிக்கெட் விற்பனை தற்போது படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது.

கூலி
நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) உடன் கூட்டணி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் படத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கூலி என்று பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
அதன்படி இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து உள்ளார். படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
வெளிநாட்டு உரிமைகளில் மாஸ் காட்டிய கூலி:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை உலக அளவி பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து சுமார் 100 நாடுகளில் கூலி படத்தை வெளியிட்டு புதிய சாதனை படைக்க வேண்டும் என்று ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் முன்னதாக விஜய் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் ஒரே ஒரு தமிழ் நடிகர்… ஆனால் அது விஜய் இல்லை!
மேலும் தற்போது வெளிநாடுகளில் சில இடங்களில் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது. மேலும் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறதோ அங்கு எல்லாம் டிக்கெட் முன்பதிவுகள் படு ஜோராகா நடைப்பெற்று வருவதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From the Emerald Isle to Eastern Europe💥
We’re thrilled to announce that the #Coolie #Ireland release by @akstradersIrl 🇮🇪 #Malta release by @indeser_films 🇲🇹 #Georgia release by @BlackTickts 🇬🇪 #Hungary release by @dakshinfilms 🇭🇺
Exciting times ahead for cinephiles… pic.twitter.com/gmYWnfDMvq
— Hamsini Entertainment (@Hamsinient) July 27, 2025
Also Read… அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?