டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Tovino Thamas Pallichattambi Movie New Poster: மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்திலிருந்து புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பள்ளிச்சட்டம்பி
மலையாள சினிமாவில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள டொவினோ தாமஸ் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் மலையாளப் படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் டொவினோ தாமஸ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 5 படங்கள் வெளியானது.
இதில் மூன்று படங்களில் நாயகனாகவும் இரண்டு படங்களில் கேமியோ வேடத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
பள்ளிச்சட்டம்பி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு:
நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளபடம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்தை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி உள்ளார். இதில் நடிகை கயடு லோஹர் நாயகியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மலையாள மொழியில் உருவாகி உள்ள இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வருகின்ற ஏப்ரல் மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்திலிருந்து புதிய போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இணையத்தில் வைரலாகும் பள்ளிச்சட்டம்பி படத்தின் புதிய போஸ்டர்:
Welcome to the world of #Pallichattambi ❤️
A Film by Dijo Jose Antony
Worldwide release on April 9, 2026 🌍#TovinoThomas#KayaduLohar@DijoJoseAntony @ttovino @11Lohar @WWFilmsIndia #CQubeBrosEntertainment #SureshBabu @jakes_bejoy #TijoTomy @PharsFilm… pic.twitter.com/Kh41jvK1EK
— Yuvraaj (@proyuvraaj) February 28, 2026
Also Read… ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது நானியின் தி பாரடைஸ் படத்திலிருந்து வெளியான ஆயா ஷெர் பாடல்