தளபதி விஜயின் குரலில் வெளியானது செல்ல மகளே பாடலின் புரோமோ வீடியோ
Jana Nayagan Movie Chella Magale Promo | நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது.

ஜன நாயகன்
நடிகர் தளபதி விஜய் படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து பலப் படங்களில் பாடல்களையும் பாடி உள்ளார். இவர் நடிக்கும் படங்களில் நிச்சயமாக ஒரு பாடலைப் பாடும் வழக்கத்தை கொண்டுள்ளார். அந்த வகையில் இவரது பாடல்களை கேட்பதற்காகவே ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக ஜன நாயகன் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அனிருத் இசையில் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த கூட்டணியில் ஜன நாயகன் பட பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது.
விஜயின் குரலில் வெளியானது செல்ல மகளே பாடலின் புரோமோ வீடியோ:
இந்த நிலையில் நாளை 26-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் விஜயின் ஜன நாயகன படத்தில் இருந்து செல்ல மகளே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிட உள்ளனர். அதன்படி இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தில் இருந்து செல்ல மகளே பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Also Read… பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா – இயக்குநர் சுதா கொங்கரா
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kanne maniye, nothing makes us happier than listening to a melody song in Thalapathy’s voice 🥰
Lyrics by @Lyricist_Vivek 🧨#ChellaMagale from tomorrow 5.04 PM #JanaNayaganThirdSingle#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9… pic.twitter.com/ocjdOlrKXO
— KVN Productions (@KvnProductions) December 25, 2025
Also Read… பிக்பாஸில் எல்லாரும் அவங்க அவங்க கேம் ஆடுறாங்க… அமித் மனைவி ஓபன் டாக்