சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹே ராம் படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு

26 Years Of Hey Ram Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஹே ராம் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 26 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹே ராம் படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு

ஹே ராம்

Published: 

18 Feb 2026 17:03 PM

 IST

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் கமல் ஹாசன் தற்போது தமிழ் சினிமாவில் அடையாளமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் கமல் ஹாசன். இந்த நிலையில் இவர் எழுதி இயக்கிய திரைப்படம் ஹே ராம். இந்தப் படம் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வெளியான நிலையில் படம் இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சினிமா ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போதுவரை ரசிகர்களால் வரவேற்பைப் பெறும் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, ஓம் பூரி, அதுல் குல்கர்னி, விக்ரம் கோகலே, சௌரப் சுக்லா, நாசர், அப்பாஸ், சௌகார் ஜானகி, வாலி, இரவதி ஹர்ஷே, வி.எஸ். ராகவன், டெல்லி கணேஷ், கொல்லப்புடி மாருதி ராவ், சாவி வசிஷ்ட், ஒய்.ஜி.மகேந்திரன், வையாபுரி, அருண் பாலி, ஷதாப் கான், யதின் கார்யேகர், மனோஜ் பஹ்வா, சந்திரஹாசன், மோகினி மாத்தூர், துஷார் காந்தி, சரத் ​​பொங்க்ஷே, சுபாங்கி கோகலே, அன்னபூர்ணா, ஸ்ருதி கே.ஹாசன், அரவிந்த், ஷபீர், ஏ.சி.முரளி, நிகிதா பலேகர், கௌதம் காந்தடை என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

Also Read… Mrunal Thakur: ‘அதைக் கேட்பதில் தனக்கு ஒருபோதும் வெட்கம் இருந்ததில்லை’ – மிருணாள் தாக்கூர் பேச்சு!

26 ஆண்டுகள் நிறைவடைந்தது ஹே ராம் படம்:

இந்தப் படம் செமி ஃபிக்‌ஷனல் பீரியட் ட்ராமாவாக உருவாகி இருந்தது. கடந்த 1946 கல்கத்தா கலவரத்தில் தனது மனைவியை இழந்த கமல் ஹாசன் இந்து மதத்தை தீவிரமாக கடைபிடித்துக்கொண்டு காந்தியை கொல்லவேண்டும் என்று நினைக்கிறார். இறுதியில் அவர் மனது எப்படி எல்லாம் மாறியது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு  செய்துள்ளது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று புதிதாக வரும் பலருக்கு புத்தகம் போல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Mamitha Baiju: ‘அந்த விஷயத்தில் விஜய் சாரை அடிச்சிக்கமுடியாது’ – மேடையில் வெளிப்படையாக பேசிய மமிதா பைஜூ!

மிதிலாவின் 700 ஆண்டுகால ‘பஞ்சி’ திருமண மரபு: மங்கும் பாரம்பரியம், நிலைக்கும் அறிவியல்
வெளி கிரக வாழ்வினங்கள் உண்மையா?” – பாரக் ஒபாமாவின் கருத்தும் தீவிரமான விஞ்ஞான தேடலும்
சாண்டா க்ரூஸில் படகு விபத்தில் 6 பேரை காப்பாற்றிய சர்ஃபர்களின் வீர செயல்..
கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சகேத் ஸ்ரீனிவாசையா மரணம்.. நடந்தது என்ன?