தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் பதிவு!

Actor Dhanush and Director Tamizharasan Pachamuthu: தமிழ் சினிமாவில் லப்பர் பந்து என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனவர் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து. இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்க உள்ள படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியை உறுதி செய்த படக்குழு - வைரலாகும் பதிவு!

தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து

Published: 

18 Nov 2025 18:29 PM

 IST

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கொடுக்கும் இயக்குநர் சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் தான் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்தையே மாபெரும் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து (Tamizharasan Pachamuthu). இவரது இயக்கத்தில் கடந்த 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லப்பர் பந்து. ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியில் மிகவும் கலகலப்பான கதையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்ய பேசப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தொடர்ந்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்து வந்தது. மேலும் இவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்தது. இறுதியில் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளது தனுஷ் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டது.

தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியை உறுதி செய்த படக்குழு:

இது தொடர்பாக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து விழா ஒன்றில் பேசிய போது தனுஷை இயக்க உள்ளதாக தகவலை சொன்னார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து தனது பிறதந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தனுஷ் மற்றும் தமிழரசன் பச்சைமுத்து கூட்டணியில் உருவாக உள்ள படம் குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கருப்பு படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் இந்த வீக்லி டாஸ்க் சூப்பரா இருக்கே… வைரலாகும் வீடியோ

Related Stories
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?
முட்டி அளவு நீர்.. தாய்லாந்து உணவகத்தில் குவியும் வாடிக்கையாளர்கள்..
இத்தாலியில் திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு சிறப்பு சலுகைகள்..
‘சாட்ஜிபிடி கோ’ ஓராண்டுக்கு இலவசம்.. இந்தியர்களுக்கு பயனர்களுக்கு சலுகை!