ஜன நாயகன் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் FDFS எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie FDFS: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவும் மேலும் இந்தப் படத்தின் FDFS எப்போது என்பது குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன்
தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி, பாபா பாஸ்கர், டீஜய் அருணாசலம், நிழல்கள் ரவி, ரேவதி, ஸ்ரீநாத், இர்பான் ஜைன், அருண் குமார் ராஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு சினிமாவில் பெரிய அளவில் படங்களை தயாரித்து இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் மூலமாகவே காலடி எடுத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் FDFS எப்போது?
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெறுகின்றது. இந்த நிலையில் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் ஜன நாயகன் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் எனவும், தமிழகத்தில் முதல் நாள் முதல் ஷோ காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படம்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan – Runtime is said to be More than 3hrs..😮💥 FDFS Begins from 8AM IST..🌟 And looks like There won’t be any Live Telecast for the Audio Launch..✌️ pic.twitter.com/o1nM3k0ZCf
— Laxmi Kanth (@iammoviebuff007) December 15, 2025
Also Read… Jana Nayagan: தளபதி ரசிகர்களே தயாரா? அனைவரும் எதிர்பார்த்த ஜன நாயகன் அப்டேட் இதோ!