படப்பிடிப்பை முடித்தது சூர்யா 46 படக்குழு… வைரலாகும் போட்டோஸ்
Suriya 46 Movie: நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது சூர்யாவின் 46-வது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாத்தி. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வரும் நிலையில் தமிழில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது இந்தப் படத்தில் தான். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லக்கி பாஸ்கர். இந்தப் படம் 2024-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக மட்டும் இன்றி பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் பான் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்றது மட்டும் இன்றி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி ஓடிடியில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து வரவேற்பைப் பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக இவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




படப்பிடிப்பை முடித்தது சூர்யா 46 படக்குழு:
இந்தப் படத்தின் பூஜை கடந்த மே மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நிலையில் இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே செய்த விசயம்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய விஜய் சேதுபதி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya46!🎬
– The shoot of Suriya46 has officially been wrapped in Hyderabad ✅
– The First Look & Title reveal very soon 🔜
– The team is planning a SUMMER 2026 release 💥🌞Meanwhile, #Suriya is all set to begin work on his next film #Suriya47 🚀✨#Karuppu pic.twitter.com/dsssb97pWP
— Movie Tamil (@_MovieTamil) December 15, 2025