Jana Nayagan: ஜன நாயகன் திரைப்படத்தின் கன்னட டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஓபன்.. தமிழில் டிக்கெட் புக்கிங் ஓபன் எப்போது தெரியுமா?
Jana Nayagan Movie Pre-Booking : தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக பிக் பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படமானது 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் நேற்று (2025 டிசம்பர் 27) முதல் இப்படத்தின் கன்னட ப்ரீ-புக்கிங் தொடங்கியுள்ளது. இதன் தமிழ் டிக்கெட் ப்ரீ-புக்கிங் எப்போது தொடங்கும் என பார்க்கலாம்.

ஜன நாயகன்
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ரசிகர்களின் எமோஷனல் நிறைந்த படமாக எதிர்பார்க்கப்பட்டு வருவது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 2வது உருவாகியுள்ள படமாக இந்த ஜன நாயகன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. மேலும் இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என கூறப்பட்டுவந்த நிலையில், அது உண்மை இல்லை என இயக்குநர் ஹெச்.வினோத் ஜன நாயாகின பட இசைவெளியீட்டு விழாவில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாடு ப்ரீ-புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்த நிலையில், அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இந்திய டிக்கெட் ப்ரீ-புக்கிங் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் ப்ரீ-புக்கிங் பெங்களூருவில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ப்ரீ-புக்கிங் (Ticket Booking) எப்போது தொடங்கும் என் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே
ஜன நாயகன் படத்தின் கன்னட ப்ரீ-புக்கிங் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :
#JanaNayagan Bengaluru Bookings Open 👐🏼
Own release by @KvnProductions pic.twitter.com/y0TAUz8zAH
— Movie Tamil (@_MovieTamil) December 28, 2025
ஜன நாயகன் திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்த நிலையில், இதனை அடுத்ததாக இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: 2025ல் தோல்வி படங்களை கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்கள்.. அட இவர்களும் இந்த லிஸ்டில் உண்டா?
அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் முடிந்து 2 நாட்களின் இப்படத்தின் தமிழ் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அல்லது 4ம் தேதியில் இப்படத்தின் தமிழக டிக்கெட் ப்ரீ-புக்கிங் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பையும் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.