AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thalapathy Vijay: ரூ 250 கோடி இழப்பீடு.. மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த விஜய்? – மகன் – மகளின் நிலை என்ன?

Vijay And Sangeetha Divorce case: விஜய் மற்றும் சங்கீதா ஜோடியானது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடியாக இருந்துவந்தது. அந்த வகையில் மனைவி சங்கீதா, விஜய்யுடன் விவாகரத்து வேண்டும் என அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் அவருக்கு விவாகரத்து கொடுப்பதற்கு விஜய் முடிவு செய்ததாகவும், அடுத்த முடிவு என்னென்ன என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வைரல்.

Thalapathy Vijay: ரூ 250 கோடி இழப்பீடு.. மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த விஜய்?  – மகன் – மகளின் நிலை என்ன?
விஜய் மற்றும் சங்கீதாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Apr 2026 13:54 PM IST

நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) சினிமாவில் லீட் நாயகனாக நடித்து, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவராக இருந்துவருகிறார். இவர் தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ள நிலையில், ரசிகர்களை மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஒரு தலைவனாக இருந்துவருகிறார். இவர் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலிருந்து பல்வேறு தடைகளை சந்தித்துவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்திலே தனது இல்லற வாழ்க்கையிலும் பெரும் அடியை சந்தித்திருந்தார். அவரின் மனைவி சங்கீதா (Sangeetha), விஜய்யிடம் இருந்து விவாகரத்து (Divorce Case) வேண்டும் என்றும், அவர் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக தெரிவித்து, கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுவானது ரகசியமாக பாதுகாக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இவர்களின் விவாகரத்து வழக்கானது வரும், 2026ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியில் விசாரணைக்கு வருவதாகவும், விஜய் மற்றும் சங்கீதா இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து வழங்க முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.

இதையும் படிங்க: விஜய்யின் தலைவா பட பிரச்சனையை பேசிய சத்யராஜ்.. அதற்கு சிபி சத்ரயாஜ் போட்ட பதிவு என்னனு பாருங்க!

மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த விஜய்:

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இடையே கடந்த 2024ம் ஆண்டில் இருந்து பிரச்சனை நடைபெற்றுவருவதாகவும், விஜய் தன்னிடம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த தொடர்பிலும் இல்லை என்று சங்கீதா தெரிவித்திருந்தார். மேலும் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் தகவலின்படி, தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறார். இருவருக்கும் தெரிந்த ஒரு நெருங்கிய ஜோதிடருடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது; இருப்பினும், மனைவி சங்கீதா தனது முடிவில் உறுதியாக இருப்பதால், விஜய் அவருக்கு விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடர முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ‘தேசிய விருது உனக்கு வரணும்’.. தாய் கிழவி படத்தை பார்த்து ராதிகாவை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா!

நாளை (20/04/2026) இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான பிரிவை உறுதி செய்வது குறித்து, இரு வழக்கறிஞர்களும் விவாதித்துள்ளார்களாம். விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்த விவரங்களின்படி, விவாகரத்துக்காக அவரின் மனைவி சங்கீதா ரூ 250 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். இருப்பினும், விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷாவைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்வதாகக் கூறி, ரூ 35 கோடி இழப்பீட்டுத் தொகைக்கு மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளார் என வட்டாரங்களில் தகவல்கள் வைரலாக பரவிவருகிறது. இது குறித்த உண்மையான தகவல்கள் நாளை 2026 ஏப்ரல் 20ம் தேதியில் விசாரணைக்கு பிறகே உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு பற்றி இணையத்தில் வைரலாகும் பதிவு:

தற்போது விஜய் முழுவதுமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கிற்கு, பரஸ்பர விவாகரத்து கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us