Ghilli: அப்படி போடு போடு போடு… 22 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய் – திரிஷாவின் கில்லி திரைப்படம்!

22 Years Of Ghilli: தளபதி விஜய்யின் நடிப்பில் மற்றும் இயக்குநர் தரணியின் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகியிருந்த படம்தான் கில்லி. திரிஷா மற்றும் விஜய் இணைந்து நடித்த, இந்த படமானது இன்று 2026 ஏப்ரல் 17ம் தேதியோடு வெளியாகி கிட்டத்தட்ட 22 ஆண்டுகளை கடந்துள்ளது.

Ghilli: அப்படி போடு போடு போடு... 22 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய் - திரிஷாவின் கில்லி திரைப்படம்!

கில்லி திரைப்படம்

Updated On: 

17 Apr 2026 17:39 PM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் விஜய்க்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்த திரைப்படங்களில் ஒன்றுதான் கில்லி (Ghilli). இந்த படமானது 2003ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான ஒக்கடு (Okkadu) என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தை தமிழ் இயக்குநர் தரணி (Dharani) இயக்க, தயாரிப்பாளர் ரத்தினம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் கபடி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது தமிழில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியில் வெளியாகியிருந்தது.

இதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த், தாணு, மயில்சாமி, நான்சி ஜெனிஃபர் மற்றும் பொன்னம்பலம் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 17ம் தேதியோடு இப்படமானது வெளியாகி 22வது வருடத்தை கடந்துள்ளது . இதை கொண்டாடும் விதத்தில் இணையத்தில் ரசிகர்கள் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள்.. படக்குழு உடனடியாக எடுத்த முடிவு!

கில்லி திரைப்படம் 22வது வருடத்தை கடந்தது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:

நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்திருந்த முதல் திரைப்படம்தான் கில்லி. இந்த படமானது தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் பூமிகா இணைந்து நடித்திருந்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் திரைப்படமாகும். அந்த வகையில் தமிழில் தளபதி விஜய் இப்படத்தில் நடித்திருந்த நிலையில், 2004ம் ஆண்டில் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வெறும் ரூ 8 கோடி பொருட்செலவில் வெளியான இப்படமானது சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் அதிகம் வசூலித்திருந்தது.

இதையும் படிங்க: ராமாயணா படத்தில் எனது ராவணன் கதாப்பத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகர் யாஷ்

அந்த வகையில் இப்படமானது கடந்த 2024ம் ஆண்டில், கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்திருந்த நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் இப்படமானது சுமார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்து அதிகம் வசூலித்த படங்களில் கில்லி படம் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டுடன் இப்படமானது 22வது வருடத்தை எட்டியநிலையில், ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
பாடகி கேஎஸ் சித்ரா தனது மகளை பற்றி பகிர்ந்த பதிவு.. உடன் அன்பை பகிர்ந்த பாடகர்கள்..
கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - 30 நிமிடங்களில் வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்பு
பெட்ரோலுக்கு ரூ.18 இழப்பு, டீசலுக்கு ரூ. 35 இழப்பு - நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈரானுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் நிறுத்தம் - அமெரிக்கா கடும் நடவடிக்கை