முன்னணி பின்னணி பாடகி கேஎஸ் சித்ரா சமீபத்தில் தனது மறைந்த மகள் நந்தனாவை நினைவுகூர்ந்து உணர்ச்சி மிகுந்த பதிவொன்றை பகிர்ந்துள்ளார். மகளின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “நீ இங்கே இல்லாதது எப்போதும் எனக்கு வலியைத் தரும். ஆனால் நாம் மீண்டும் சந்திக்கும் வரை நீ என் இதயத்தில் என்றும் இருப்பாய்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து கருத்துகள் பகிர்ந்தனர்.