தனுஷின் வாத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இவர் நடித்திருந்தால் மெகா ஹிட்டாகிறுக்குமே!

Dhanush Vaathi Movie: தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு தனுஷின் நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் வாத்தி. இப்படத்தில் முதலில் ஒரு பிரபல தெலுங்கு நடிகர் நடிக்கவிருந்தாராம். அவர் யார்?, எதற்காக நிராகரித்தார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

தனுஷின் வாத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இவர் நடித்திருந்தால் மெகா ஹிட்டாகிறுக்குமே!

தனுஷ் வாத்தி திரைப்படம்

Published: 

06 May 2026 08:38 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்தாலும், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கர (Kara) என்ற தமிழ் திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் தனுஷ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் படங்களில் நடித்திருந்தார். இதில் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியான படங்கள் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலைப் பெற்றிருந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவை காட்டிலும் தனுஷிற்கு தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தனுஷின் நடிப்பில் வெளியான முதல் தெலுங்கு மற்றும் தமிழ் படமாக அமைந்தது வாத்தி திரைப்படம் (Vaathi).

இதை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் கொடுத்து ஹிட் கொடுத்திருந்தது. அந்த வகையில் இப்படத்தில் தனுஷிற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் யார் தெரியுமா?. அட அந்த நடிகர் வேறுயாருமில்லை, டோலிவுட் மெகா ஸ்டார் ராம் சரண்தான் (Ram Charan).

இதையும் படிங்க: சுவாரஸ்யமான திருப்பம்… தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு!

வாத்தி படத்தை நடிகர் ராம் சரண் நிராகரிக்க காரணம் :

இயக்குநர் வெங்கி அட்லூரி முதலில் வாத்தி படத்தின் கதையை, ராம் சரணிடம் கூறினாராம். ராம் சேரனுக்கும் அந்த படத்தின் கதை பிடித்திருந்த நிலையில், படம் மிகவும் ஆடம்பரமாக இருப்பதாகவும், ரசிகர்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா என்றும் சந்தேகித்ததால், சரண் இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை ஏன் கூறப்பட்டது. இதனாக இந்த திரைப்படமானது தனுஷிடம் சென்றது.

இதையும் படிங்க: பிரபல நடிகையுடன் மோதலா? அந்த நடிகர்தான் காரணமா? – திரிஷாவே சொன்ன உண்மை!

அதில் தனுஷ் நடிக்க, தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக வெளியாகி தனுஷிற்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்தில் அந்த அளவிற்கு ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பு இல்லாததால் ராம் சரண் இப்படத்தை நிராகரித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் தனுஷ் இப்படத்தில் நடித்திருந்த நிலையில், ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்து சூப்பர் ஹிட்டாகியிருந்தது.

நடிகர் ராம் சரணின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கிறார். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் பெடி. இதை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்க, ராம் சரண் பையில்வானாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..