நடிகர் சங்கம் சிம்புவிற்காக போராட வேண்டும்… அரசன் படப்பிடிப்பு நிறுத்ததிற்கு டி.ராஜேந்தர் கண்டனம்
T Rajendar has condemned for Arasan movie shooting stopped | தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அரசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு டி ராஜேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வந்தார். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர். தொடர்ந்து படம் கடந்த டிசம்பர் மாதம் முதல் படமாக்கப்பட்டு வருகிறது. அவ்வபோது அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது, மேலும் அரசன் படத்தில் நடிக்கும் நடிகர்களும் தொடர்ந்து தங்களது கருத்துகளை பேட்டியில் கூறி வந்ததும் வைரலாகி வந்தது. இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வைரலாகி வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக அரசன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுளதாக செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் சிலம்பரசனின் தந்தையும் நடிகருமன டி. ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கை தற்போது அந்த செய்தி உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது.
அரசன் படப்பிடிப்பு நிறுத்ததிற்கு டி.ராஜேந்தர் கண்டனம்:
அதன்படி டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நான் சிலம்பரசனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அறம்தவறி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் வருகின்றேன். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் சிம்புவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் நான் சிம்புவிற்கு ஆதரவாக வாதாடினேன். அப்போது சிம்புவிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்துக்கு தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கொடுத்த அட்வான்ஸ் சிலம்பரசனையே போய் சாரும் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
Also Read… Atlee: கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்… நீளிரா திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!
அந்தப் பழைய வழக்கை எடுத்து வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், அதற்கு துணையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் சேர்ந்து இன்றைக்கு அரசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் ஒரு நடிகருக்காக தென் இந்திய நடிகர் சங்கமும் ஏன் போராடக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அரசன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியதற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.
Also Read… பிரசாந்த் கூட அப்பு படத்தில் நடிக்கும் போது இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை – மனம் திறந்த தேவயானி