இணையத்தில் கவனம் பெறும் நடிகர் சூர்யாவின் நியூ லுக்
Suriya New Photo: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இயக்குநருடன் தனது 47-வது படத்திற்காக கூட்டணி வைத்தார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் தற்போது அவரது நியூ லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணகாம அடுத்ததாக வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூர்யாவிற்கு ரெட்ரோ படம் வெற்றியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு, சூர்யா 46 மற்றும் சூர்யா 47 ஆகியப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் முன்னதாக கருப்பு மற்றும் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக முடிவடைந்த நிலையில் தற்போது சூர்யா 47 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ஜித்து மாதான் இவர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்கி வருகிறார்.
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் சூர்யாவின் நியூ லுக்:
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைப்பெற்று வருகின்றது. இதில் நடிகர் சூர்யாவின் லுக் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இது தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Suriya Recent Click 👀#Suriya47 Sambavam loading 🥁 pic.twitter.com/VdjBrqlX7a
— Movie Tamil (@_MovieTamil) December 23, 2025