கருப்பு படத்தை எந்த வயதில் உள்ளவர்கள் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்
Suriyas Karuppu Movie Censor Update: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கருப்பு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

கருப்பு
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியாக உள்ள படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளர். மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. அதில் இயக்குநர் மற்றும் நடிகர்கள் பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தொடர்பாக படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் உட்பட நடிகர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
கருப்பு படத்தை எந்த வயதில் உள்ளவர்கள் எல்லாம் பார்க்கலாம்?
இந்த நிலையில் கருப்பு படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கருப்பு படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இது தொடர்பான அப்டேட்டை படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இயக்குநராக இருப்பவருக்கு துரந்தர் ஒரு பாடமாக இருக்கும் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Karuppu has been certified U/A.
A power-packed theatrical experience awaits worldwide on May 14🔥
A @SaiAbhyankkar Musical 🎶 @Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi… pic.twitter.com/otT0XGl60N
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 4, 2026