சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ
Suriyas Sweet Gesture : நடிகர் சூர்யா தனது சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் நடித்த சக நடிகரின் குழந்தைக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.

சூர்யா
கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பதால் மட்டும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து ஏழை மாணவர்களின் கல்வி கனவை நினைவாக்கி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்குறார். இவரின் உதவியால் பல குடும்பங்கள் தங்களில் வாழ்வாதாரத்தால் முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது சமீபத்தில் நடந்த அகரம் விழாவில் பலர் கூறியிருந்தனர். பலர் சூர்யாவின் உதவியால் படித்து தங்களது வாழ்வாதாரம் எந்த அளவிற்கு உயரிந்துள்ளது என்பது குறித்து தெரிவித்தது பலரின் மனதை நெகிழச் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பலரின் வாழ்க்கையை மாற்றிய சூர்யாவை தமிழக மக்கள் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் உள்ள பலர் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி சொந்த வாழ்க்கையில் தனது நல்ல செயல்களால் பாராட்டப்படும் நடிகர் சூர்யா அடுத்தடுத்தப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் அடுத்தடுத்து கருப்பு, சூர்யா 46, சூர்யா 47 படங்கள் உருவாகி வருகின்றது. இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
தன்னுடன் நடித்த நடிகரின் குழந்தைக்கு தங்க சங்கிலி பரிசளித்த சூர்யா:
இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவின் 46-வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலானது. இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய இந்தப் படம் 2026-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் நடித்த நடிகரின் குழந்தைக்கு சூர்யா தங்க சங்கிலி ஒன்றை பரிசளித்துள்ளார். அது தொடர்பான வீடியோ தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… பைசன் காளமாடன் படத்திலிருந்து வெளியானது தீ கொளுத்தி பாடல் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Little moments that say it all. ♥️@Suriya_offl anna gifting a gold chain to the co-actor’s kid from #Suriya46 🥰✨ pic.twitter.com/wBmMH9qRR6
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) December 18, 2025
Also Read… ஒரு பேரே வரலாறு… வைபாக வெளியானது ஜன நாயகன் 2-வது சிங்கிள் வீடியோ புரோமோ