விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்… வைரலாகும் அப்டேட்

Suriya 47 Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்ற நிலையில் சூர்யாவின் 47-வது படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்... வைரலாகும் அப்டேட்

சூர்யா

Published: 

27 Oct 2025 14:12 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பி இறுதியாக வெளியானது ரெட்ரோ படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். படத்தின் பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூர்யா 46 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் இறுதியாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் 47-வது படத்தின் பணிகள் தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்:

அதன்படி மலையாள சினிமாவில் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்க உள்ளார். போலீஸ் ஸ்டோரியாக உருவாக உள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். மேலும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகை நஸ்ரியா மற்றும் ஃபகத் பாசில் இருவரும் நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி நடிகை நஸ்ரியா முன்னணி கதாப்பத்திரத்தில் நடிக்க உள்ளதாகவுஅம் ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதற்கான செட்களை அமைக்கும் பணிகளை படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இது குறித்த தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் – கே.எஸ்.ரவிக்குமார்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் தகவல்