நீலாம்பரியாக நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையிடமே பேசினோம் – நடிகர் ரஜினிகந்த் ஓபன் டாக்

Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தற்போது திரையுலகமே கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் படையப்பா படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் ஈர்த்து வருகின்றது.

நீலாம்பரியாக நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையிடமே பேசினோம் - நடிகர் ரஜினிகந்த் ஓபன் டாக்

படையப்பா

Published: 

10 Dec 2025 13:08 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் அதனைத் தொடர்ந்து வில்லனாக நடித்தார். ரெட்ரோ பீடியடியில் இவர் வில்லனாக கலக்கிய படங்கள் தற்போதும் ரசிகர்களிடையே அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் சினிமாவில் தனது கடின உழைப்பின் காரணமாக அடுத்தடுத்த நிலைகளை அடைந்த ரஜினிகாந்த் தொடர்ந்து நாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஸ்டைல் என்றாலே ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறும் அளவிற்கு அவரது ஸ்டைலான நடிப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமான படம் படையப்பா. இந்தப் படம் ரஜினிகாந்தின் சினிமா கெரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக படையப்பா படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக அவர் நடிக்க வேண்டியது:

இந்த நிலையில் படையப்பா படம் குறித்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் போது முன்னதாக நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேசினோம். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை அதனைத் தொடர்ந்து தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார்.

மேலும், “நீலம்பரி” என்று பெயரிடப்பட்டுள்ள “படையப்பா 2” படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, “படையப்பா” படம்தான் லேடீஸ் தியேட்டர்களுக்குள் நுழைந்து படத்தைப் பார்த்தது. நான் படத்தை எந்த ஓடிடிக்கும் கொடுக்கவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Also Read… பூஜையுடன் தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ:

Also Read… ரத்னகுமார் இயக்கத்தில் புதிதாக உருவாக உள்ள படம்… வெளியானது அப்டேட்

வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் போது கிடைத்த தங்கம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
மம்மூட்டியின் பாதயாத்ரா படம்.. கொச்சியில் தொடங்கிய படப்பிடிப்பு..
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இதை நோட் பண்ணுங்க..
குடியரசு தின விழா - ஆண்கள் மட்டுமே உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைமை தாங்கும் பெண் அதிகாரி