Rajinikanth: கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர்.. தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்!

Rajinikanth Pays Emotional Tribute For AVM Saravanan: தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்துவந்தவர்தான் ஏவிஎம் சரவணன். இவர் இன்று 2025 டிசம்பர் 4ம் தேதியில் வந்து மூப்பின் காரணமாக காலமானார். இந்நிலையில் சென்னை வடபழனியில் இருக்கும் சரவணனின் இல்லத்திற்கு சென்று, அவரின் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Rajinikanth: கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர்.. தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்!

ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

Published: 

04 Dec 2025 13:10 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக இருந்துவந்தவர் ஏவிஎம் சரவணன் (AVM Saravanan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாம் போன்ற மொழி படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவரின் தயாரிப்பில் வெளியான படங்கள் மூலம் பல நடிகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று கூறலாம். அந்த விதத்தில் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) கமல்ஹாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் பல படங்களை AVM நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மிக பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தயாரித்து, நல்ல படங்களை மக்களிடையே சேர்த்திருக்கிறார் இவர். இவர் இன்று 2025ம் டிசம்பர் 4ம் தேதியில் வயது மூப்பு (86) காரணமாக சென்னை வடபழனியில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார்.

இந்நிலையில் இவரின் உடலுக்கு மரியாதையை செலுத்தும் விதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் இதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பராசக்தி பட ஆடியோ லான்ச் எப்போது? அட இந்த பிரபலங்கள் தான் கெஸ்ட்-ஆ?

ஏவிஎம் சரவணனுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தியது தொடர்பான பதிவு :

செய்தியாளர்கள் சந்திப்பில் ஏவிஎம் சரவணன் குறித்து பேசிய ரஜினிகாந்த்:

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், “அவர் மிகப்பெரிய மனிதர். ஓர் ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றால் சரவணன் சார் தான். எப்போதும் அவர் வெள்ளை உடையணிவார். அதுபோல அவரின் உள்ளமும் வெள்ளைதான். அவர் சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். அவரிடம் கொஞ்சநேரம் பேசினால் கூட தனது தந்தையை பற்றி பேசிக்கொண்டே இருப்பார். என்மேல் அவருக்கு ரொம்ப அன்பு, எனது நலம் விரும்பி, மேலும் எனது கஷ்டகாலங்களில் எனக்கு மிகவும் துணையாக நின்றவர். AVM நிறுவனத்தின் கீழ் நான் கிட்டத்தட்ட 9 படங்களில் நடித்திருக்கிறேன்.

இதையும் படிங்க: பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்!

அந்த படங்கள் அனைத்தும் ஹிட். அதற்கான மெயின் காரணம் சரவணன் சார் என்று சொன்னால், அது மிகையாகாது. 80களில் முரட்டுக்காளை என்ற படம்தான் தமிழில் மிக பிரம்மாண்டமாக செலவு செய்து எடுத்த படம், 2000களில் சிவாஜி மிகப்பெரிய படம். மேலும் தற்போதும் என்னை வைத்து ஒரு பிரம்மாண்டமான படம் எடுக்கவேண்டும் என அவர் பேசிக்கொண்டிருந்தார். அது நடக்கவே இல்லை, அவரின் மறைவு எனது மனதை ரொம்பவே பாதிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும், அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என ரஜினிகாந்த் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி