Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : கண்ணப்பா படக்குழுவைச் சந்தித்த ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட விஷ்ணு மஞ்சு!

Rajinikanth Met Kannappa Movie Crew : தமிழ் சினிமாவையும் தொடர்ந்து, பான் இந்தியா அளவில் மிகவும் பிரபலமானவர் ரஜினிகாந்த். படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தனது படங்களை தொடர்ந்து மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை நேரில் சந்தித்துப் பாராட்டியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கண்ணப்பா படக்குழுவினரை நேரில் சந்தித்துள்ளார்.

Rajinikanth : கண்ணப்பா படக்குழுவைச் சந்தித்த ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட விஷ்ணு மஞ்சு!
ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு மஞ்சுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jun 2025 18:27 PM IST

தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவின்  (Vishnu Manju)  நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியிருக்கும் படம்  கண்ணப்பா (Kannappa). இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் முகேஷ் குமார் சிங் (Mukesh Kumar Singh) இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது இந்து புராணக் கதையான கண்ணப்பனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக்க உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சுதான் முன்னணி கதாநாயகனாகக் கண்ணப்பன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பான் இந்திய நடிகர்கள் பிரபாஸ் (Prabhas), மோகன் லால் (MohanLal), அக்ஷ்ய் குமார் மற்றும் காஜல் அகர்வால் (Kajal Aggarwal)  எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த கண்ணப்பா படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகியிருக்கிறது.

மேலும் இப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கண்ணப்பா படக்குழு நடிகர் ரஜினிகாந்த்தை (Rajinikanth) நேரில் சந்தித்துள்ளனர். மேலும் இப்படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் மிகவும் அருமையாக உள்ளது என்று விமர்சனத்தையும் கொடுத்துள்ளார்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து விஷ்ணு மஞ்சு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்த நடிகர் விஷ்ணு மஞ்சு, அந்த தருணத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அதில் அவர் , “கண்ணப்பா படத்தை ரஜினிகாந்த் பார்த்தார். அந்த படத்தைப் பார்த்து முடித்து என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தார். மேலும் அவர் என்னிடம் கண்ணப்பா படத்தை மிகவும் விரும்பிப் பார்த்ததாக கூறினார். நான் ஒரு நடிகராக 22 வருடங்களாக இந்த அணைப்பிற்காகக் காத்திருந்தேன். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் உலகமெங்கும் சிவபெருமானின் மாயாஜாலத்தை உணர ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு அந்த எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.

பான் இந்தியப் படம் கண்ணப்பா :

இந்த படத்தை இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு முக்கிய நாயகனாகக் கண்ணப்பன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது இந்து புராண கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் நிலையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.