அலப்பறை கிளப்புறோம்… தலைவரு நிரந்தரம்… ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு

Jailer 2 Movie Shooting Wrapped : தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அலப்பறை கிளப்புறோம்... தலைவரு நிரந்தரம்... ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு

ஜெயிலர் 2

Published: 

21 Apr 2026 13:15 PM

 IST

உலக அளவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் போது தலைவர் 173 மற்றும் KHxRK ஆகியப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து அவ்வபோது செய்தியாளர்களை சந்திக்கும் போது தனது நடிப்பில் உருவாகும் படங்களின் நிலை என்ன என்பது குறித்த அப்டேட்டை தெரிவித்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஜெயிலர் 2 படக்குழு:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர். இந்தப் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல அடுத்ததாக இரண்டாவாது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கர படத்தின் விழாவில் கலகப்பாக பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhanush: அந்த நடிகைக்கு பிறகு.. மமிதா பைஜூவின் நடிப்பை பார்த்து வியந்தேன் – தனுஷ் பேச்சு!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..