சவுண்ட ஏத்து… தேவா கம்மிங்… நாளை வெளியாகிறது கூலி – வைரலாகும் போஸ்ட்

Coolie Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

சவுண்ட ஏத்து... தேவா கம்மிங்... நாளை வெளியாகிறது கூலி - வைரலாகும் போஸ்ட்

கூலி

Published: 

13 Aug 2025 12:27 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் இருதியாக திரையரங்குகளில் வெளியான படம் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா க்ருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா செபாஸ்டின், அர்ஜுன், சஞ்சய் தத் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்சின் கீழ் வருவதால் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் விக்ரம் படத்தில் நடித்த நடிகர் கமல் ஹாசனின் குரல் மட்டும் ஒலிபரப்பாகும். இது சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதை புரிய வைப்பதற்காக அமைக்கப்பட்ட கட்சி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டதும், படத்தில் நடித்த நடிகர்களின் பட்டியல் வெளியான போது கூலி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு:

கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு பிறகு படக்குழு படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் கூலி படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலமாக சென்று புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் படம் நாளை ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்தப் படதிவு தற்போது ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக கலக்கிய படங்களின் லிஸ்ட் இதோ!

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… துல்கர் சல்மானின் காந்தா படத்தின் பாடலைப் பாராட்டிய நடிகர் ரவி மோகன்