எஸ்டிஆர் 49 படத்தில் நடிகர் சிம்பு இப்படிதான் இருப்பார் – இயக்குநர் ராம்குமார் கொடுத்த அப்டேட்!
Director Ramkumar Balakrishnan: நடிகர் சிம்பு தற்போது கோலிவுட் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து இவரது படங்களில் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்டிஆர் 49 குறித்த அப்டேட் ஒன்றை இயக்குநர் ராம்குமார் தெரிவித்தது வைரலாகி வருகின்றது.

எஸ்டிஆர் 49
நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan) தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இறுதியாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து தனது நடிப்பில் வரவிருக்கும் 3 படங்களின் அப்டேட்டை வெளியிட்டார். இது அவரது ரசிகர்களை பண்டிகையை கொண்டாடுங்களே என்பது போல மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது 49-வது படத்திற்காக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா உடன் கூட்டணி வைத்திருப்பதை அறிவித்தார். இவர் முன்னதாக பார்க்கிங் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் தான் இவர் இயக்குநரகா அறிமுகம் ஆனப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 2023-ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் பார்க்கிங் படம் 3 விருதுகளைப் பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாகவே எஸ்டிஆர் 49 படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மிகவும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்டிஆர் 49 குறித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன அப்டேட்:
பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட பிறகு இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா தொடர்ந்து சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் அவர் அடுத்ததாக இயக்க உள்ள எஸ்டிஆர் 49 படம் குறித்தும் பேசியுள்ளார். இப்படி அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எஸ்டிஆர் 49 படம் முழுக்க முழுக்க கல்லூரி கதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சிலம்பரசனின் லுக் இந்தப் படத்தில் எப்படி இருக்கும் என்றால் முன்னதாக அவரது நடிப்பில் வெளியான மன்மதன் மற்றும் வல்லவன் படத்தில் அவர் இருக்கும் தோற்றம் போல இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய இயக்குநர் ராம்குமார் இந்தப் படம் இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் கவனம் பெறும் ராம்குமார் பாலகிருஷ்ணனின் பேச்சு:
#Ramkumar Recent
– #STR49 is in the style of #Manmadhan and #Vallavan.
– This film is entirely for his fans and will also connect with every youngster.#SilambarasanTRpic.twitter.com/oe7CdQVKpT— Movie Tamil (@MovieTamil4) August 8, 2025
Also Read… Lokesh Kanagaraj : ஆமிர் கான் நடிக்கும் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் – லோகேஷ் கனகராஜ் பேச்சு!