2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
2025 Most Attention South Indian Movies: தென்னிந்திய சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படங்கள் லிஸ்ட் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
எல்2 எம்புரான்: நடிகர் மோகன்லால் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் எல்2 எம்புரான். இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாரன் எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் வெளியான போது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என சிலர் போராட்டம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி எத்தனை தடைகள் வந்தாலும் படத்தின் வெற்றியில் எந்த மாற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் இது மலையாள சினிமாவில் வெளியாகி இருந்தாலும் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏபரல் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது இருந்தது. இதனைத் தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தி கோர்ட்: தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் தயாரிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் தி கோர்ட். இயக்குநர் ராம் ஜகதீஸ் எழுதி இயக்கிய இந்தப் படம் போக்சோ சட்டத்தை எப்படி எல்லாம் தவறாக சிலர் பயன்படுத்துகிறார்கள் என்று வெளிப்படையாக பேசி இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் பிரியதர்ஷி முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.




Also Read… மணி ரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி- சாய் பல்லவி… படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
லோகா சாப்டர் 1 சந்திரா: மலையாள சினிமாவில் மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ படமாக வெளியானது லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருன் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் மலையாள சினிமாவில் வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.