ஃபிலிம் கேமராவில் படமாக்கப்பட உள்ளது KHxRK படம்? வைரலாகும் தகவல்

Kamal Haasan and Rajinikanth's reunion film update: தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த படம் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஃபிலிம் கேமராவில் படமாக்கப்பட உள்ளது KHxRK படம்? வைரலாகும் தகவல்

KH x RK படம்

Published: 

02 Mar 2026 13:01 PM

 IST

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாகவும், அடையாளமாகவும் வலம் வருபவர்கள் நடிகர்கள் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக பல ஹிட் படங்களில் நடித்து வந்த நிலையில் அவரது படத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து கமல் ஹாசனின் படங்களில் அவரது நண்பராக நடித்து வந்த நிலையில் பிறகு அவருக்கு வில்லனாக நடிக்கத் தொடங்கினார். இப்படி தொடர்ந்து நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பிறகு கமல் ஹாசன் vs ரஜினிகாந்த் என்று மாறியது.

இப்படி மாறிய பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. சுமார் 46 வருடங்களாக இணைந்து நடிக்காமல் இருந்த நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து தற்போது மீண்டும் படத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஃபிலிம் கேமராவில் படமாக்கப்பட உள்ளது KHxRK படம்?

அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்க உள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவை ராஜிவ் மேனன் கவனிக்க உள்ளார். இந்த நிலையி படம் தொடர்பான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி  உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரீயூனியன் படம் பிலிம் கேமராவில் படமாக்கப்பட உள்ளது, அங்கு 90கள், 80கள் போன்ற படங்கள் அதைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டன. நெல்சனும் ராஜீவ்மேனனும் உண்மையில் அந்த ப்ரோமோவையே படமாக்க முயன்றனர், ஆனால் நேரக் கட்டுப்பாடு காரணமாக அவர்கள் ப்ரோமோவிற்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தினர் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… கைதி 2 படம் குறித்து 14-ம் தேதி வெளியாகும் சூப்பர் அப்டேட்… வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வாழ 2: பயோ பிக் ஆஃப் எ பில்லியன் ப்ரோஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ