ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடையும்? வைரலாகும் தகவல்
Jailer 2 Movie Shooting Update : நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் தற்போது பரவி வருகின்றது.

ஜெயிலர் 2
உலக அளவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் உலக அலவில் ரசிகர்கலிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் கடந்த 2025-ம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற தமிழ் படம் என்ற பெறுமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
முன்னதாக வெளியான ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்ற கேள்வியுடன் முதல் பாகத்தை முடித்தது போல இந்த ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் அவரது மகனை சுட்டாரா இல்லைய என்பது போன்று முடிந்தது. இதற்கான விடை இரண்டாம் பாகத்தில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடித்தக்கது.
ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடையும்?
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்த ஜெயிலர் 2 படத்தில் பான் இந்திய அளவில் பிரபலங்கள் பலர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் இறுதியில் முடிவடையும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அரசன் படத்திற்கு பிறகு சிலம்பரசன் எந்தப் படத்தில் நடிப்பார் தெரியுமா? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 shooting is going to be wrapped up by End of February, 2026. #Nelson,@sunpictures and whole crew has plenty of time to focus on PP and come up with best possible final product. This movie will have the hype which may exceed #Kabali and surely #Coolie ❤️🔥🤞. Can’t wait pic.twitter.com/IbaYSYSQ4X
— Karthik (@meet_tk) January 19, 2026
Also Read… துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் அறிமுக நடிகை.. ரசிகர்களிடையே வைரலாகும் கிளிம்ப்ஸ்!