எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி – நடிகர் சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது நடிப்பில் வெளியான படங்களில் எந்தப் படத்தின் தொடர்ச்சியை எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனது படங்களில் அந்தப் படத்தை 2-வது பாகம் எடுத்தால் மகிழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

Updated On: 

04 Aug 2025 16:33 PM

நாஸ்காம் மக்கள் உச்சி மாநாடு 2025 (Nasscom People Summit 2025) சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகர்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். சினிமா குறித்தும் சினிமாவில் தனது வளர்ச்சி குறித்தும் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனிடம் (Actor Sivakarthikeyan) பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவரது நடிப்பு அனுபவம் குறித்தும் தொலைக்காட்சியி இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகராக அவர் வளம் வரும் அனுபவம் குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகள் அனைத்திற்கும் தனது பாணியில் மிகவும் கலகலப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் நாஸ்காம் மக்கள் உச்சி மாநாடு 2025 நிகழ்ச்சியில் கேள்வி பதில் நேரத்தில் பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து நடிகர் சிவகார்த்திகேயனிடம் ஒரு கேள்வி ஒன்றை எழுப்பினார். அது என்ன என்றால் நீங்கள் நடித்தப் படங்களில் எந்தப் படத்தினை பார்ட் 2 எடுக்க விரும்புவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மாவீரன் படத்தினை பார்ட் 2 எடுக்கலாம்:

இதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், பொதுவாக எனது படங்களை அடுத்தடுத்த பாகங்களாக எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. காரணம் சிறப்பான கதையுடன் ஹிட் அடித்தப் படத்தை இரண்டாவது பாகம் என்ற பெயரில் அதனை சீர் குழைக்க வேண்டாம் என்று நினைப்பேன். அதனால் இரண்டாவது பாகம் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Also Read… எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார் – ஏ.ஆர்.முருகதாஸ்

அப்படி இரண்டாவது பாகம் ஏதேனும் படத்தை எடுக்க வேண்டும் என்றால் மாவீரன் படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவேன். ஏன் என்றால் அந்தப் படம் கதையின்படியே மிகவும் சிறந்ததாக இருக்கும். அந்தப் படத்தை இரண்டாவது பாகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் சிவகார்த்திகேயனின் பேச்சு:

Also Read… உங்களுக்கு ஆக்‌ஷன் த்ரில்லர் பிடிக்குமா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் ஆஃபிசர் ஆன் டியூட்டி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!