Silambarasan: எனக்கு தனுஷ் எதிரியா? அதில் மட்டும்தான் அவர் எனக்கு போட்டி- சிலம்பரசன் பகிர்ந்த விஷயம்!

Silambarasan About Dhanush: தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன் தனக்கும், தனுஷிற்கு இருக்கும் நட்பு மற்றும் போட்டி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

Silambarasan: எனக்கு தனுஷ் எதிரியா? அதில் மட்டும்தான் அவர் எனக்கு போட்டி- சிலம்பரசன் பகிர்ந்த விஷயம்!

சிலம்பரசன் மற்றும் தனுஷ்

Published: 

28 Oct 2025 08:30 AM

 IST

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை 48 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. தனது தந்தை டி ராஜேந்திரன் (T Rajendran) மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life) . இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இப்படத்தின் கதையை கமல்ஹாசன் (Kamal Haasan) எழுதியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் முன்னணி நாயகனாக நடிக்க, சிலம்பரசன் 2வது நடிகர் வேடத்தில் நடித்திருந்தார். இந்த தக் லைஃப் படமானது கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரும் தோல்வியை இப்படமானது சந்தித்தது என்றே கூறலாம். இந்த படத்தை அடுத்ததாக சிலம்பரசன் கிட்டத்தட்ட 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன், தனக்கும் தனுஷிற்கு (Dhanush) பகை இருப்பதாக பரவும் தகவலுக்கு விளக்கம் கொடுத்து பேசியிருந்தார். அது என்ன என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் தகவல்

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட அரசன் படம் குறித்தான எக்ஸ் பதிவு :

தனுஷ் குறித்து பேசிய நடிகர் சிலம்பரசன் :

அந்த நேர்காணலில் நடிகர் சிலம்பரசன், தனுஷ் பற்றி பேசியிருந்தார். அதில் அவர், “பொதுவாக எல்லா நடிகர்களிடமும் நான் நன்றாக பேசுவேன், அவர்களும் நன்றாகத்தான் பேசுவார்கள். மேலும் தனுஷ் என்னுடைய மிக பெரிய எதிரி என பலரும் நினைப்பார்கள். நானும் அவரும் பேசுவதே இல்லை, இருவரும் சண்டை போட்டிருக்கிறோம் என பல்வேறு விஷயங்கள் வெளியாகி வந்தது. நான் அப்படிப்பட்ட நபர் இல்லை, மிகவும் ஜாலியான நபர் நான். அது எல்லாருக்குமே தெரியும், நான் பேசினாலும் யாரையும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். தனுஷ் எனக்கு நல்ல நண்பர்.

இதையும் படிங்க : எல்லாத்துக்குமே முழு முதல் காரணம் சிவகார்த்திகேயன்தான் – ரியோ ராஜ் ஓபன் டாக்!

நாங்கள் நல்ல பேசிக்கொள்வோம். எப்போதுமே ஜாலியாக இருப்போம். பேசுறது , நண்பர்கள் என்பது என்றால் வேறு, இப்போது சினிமாவிற்குள் வந்துவிட்டோம் என்றால் அங்க தனுஷ் எதிரிதான். வா சண்டை போடலாமா என நானும் போட்டிபோடுவேன். அப்படி நிச்சயமாக இருந்தாகவேண்டும், அப்படி இல்லை என்றால் இருவருக்கும் ஒரு பவர் இருக்காது. அப்படி செய்யாவிட்டால் சாதாரணமான நடிகராகிவிடுவோம். சினிமாவில் எனது சக போட்டியாளரும் தனுஷ்தான்” என நடிகர் சிலம்பரசன் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.