நீங்க யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கூலி படத்தில இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!

இந்திய சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் மகளாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நீங்க யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கூலி படத்தில இருக்கு - நடிகை ஸ்ருதி ஹாசன்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகை ஸ்ருதி ஹாசன்

Published: 

25 Jul 2025 17:08 PM

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியில் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் அதிக அளவில் படங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகை ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி பாடல்கள் பாடுவதையும் விடாமல் தொடர்ந்து பாடி வருகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது நடித்துள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள நிலையில் பான் இந்திய அளவில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கூலி படத்தின் நடித்த அனுபவம் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்:

நடிகை ஸ்ருதி ஹாசன் பேசிய வீடியோவில் படம் நிச்சயமாக நீங்க நினைப்பதை விட சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யமாக நினைப்பதாகவும் இந்தியாவில் உள்ள பல ஸ்டார்களுடன் தான் நடித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் நாகர்ஜுனா குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் அவரை சின்ன வயதில் இருந்து பார்த்து அட்மைர் ஆனதாகவும் முதன்முதலாக அவருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் நானும் உங்கள மாதிரி அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பிரமித்து பார்த்தவள் தான். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

Also Read… பாமக தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் சேரன் – ராமதாஸாக நடிக்கும் நடிகர் ஆரி!

இணையத்தில் கவணம் பெரும் நடிகை ஸ்ருதி ஹாசனின் வீடியோ:

Also Read… விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ