Dhanush : குபேரா படத்திற்காக தனுஷிற்கு ‘தேசிய விருது’ கிடைக்கும் – சேகர் கம்முலா!
Sekhar Kammula Speech : நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தைப் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷிற்கு குபேரா படத்தின் மூலம் இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

டோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகப் படங்களை இயக்கி வருபவர் சேகர் கமுலா (Sekhar Kammula). இவர் சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி, பானுமதி மற்றும் நயன்தாராவின் அனாமிகா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றியைத் தொடர்ந்து , நடிகர் தனுஷின் (Dhanush) 51வது திரைப்படமான குபேரா (Kuberaa) படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா (Nagarjuna, Rashmika Mandanna) நடித்துள்ளனர். இந்த குபேரா படமானது முற்றிலும் அரசியல் மற்றும் பணம் சார்ந்த கதைக்களத்துடன் வெளியாகவுள்ளது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள நிலையில், வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ராஷ்மிகா , தனுஷ், சேகர் கம்முலா, தேவி ஸ்ரீ பிரசாத் என பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இயக்குநர் சேகர் கம்முலா, இந்த “குபேரா படத்திற்காக நடிகர் தனுஷிற்கு நிச்சயமாகத் தேசிய விருது கிடைக்கும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
A song that unfolds the essence of #Kuberaa ✨#Kuberaa2ndSingle out now!
A Rockstar @ThisIsDSP musical 🎶
Tamil – #KadhaKadhaKadhai https://t.co/IEjxFgOhrl
Telugu- #AnaganagaKadhahttps://t.co/q4JzLgfodo
In cinemas June 20, 2025.#SekharKammulasKuberaa… pic.twitter.com/PmesP0PI4a
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 2, 2025
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேகர் கம்முலாவின் பேச்சு :
கடந்த 2025, ஜூன் 1ம் தேதியில் நடந்த இசை வெளியிட்டு விழாவில் இயக்குநர் சேகர் கம்முலா, “இந்த குபேரா திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள தனுஷிற்கு, இந்த படத்தின் மூலமாக இன்னொரு தேசிய விருது நிச்சயமாகக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். குபேரா படத்தை அவரைத் தவிர மற்ற யாராலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது, பான் இந்தியா அளவிற்கு உருவாகியுள்ள இப்படமானது ஒரு சமூக அரசியல் சார்ந்த த்ரில்லர் திரைப்படமாக உள்ளது” என்று இயக்குநர் சேகர் கம்முலா கூறியுள்ளார்.
தனுஷின் குபேரா :
இந்தக் குபேரா படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் நடிகர் நாகார்ஜுனாவும் மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இவ்வாறு மிகப் பிரம்மாண்ட நடிகர்களைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.