சந்தானத்தின் புதுப் படத்தின் டைட்டில் லவ் பைட் – தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்

Santhanam Next Movie Name Is Love Bite | நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாக உள்ள அடுத்தப் படத்திற்கு லவ் பைட் என்று பெயர் வைத்துள்ளனர்.

சந்தானத்தின் புதுப் படத்தின் டைட்டில் லவ் பைட் - தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்

லவ் பைட்

Published: 

08 May 2026 14:06 PM

 IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் சந்தானம். அதனைத் தொடர்ந்து நாயகன்களின் நண்பனாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். ஒவ்வொரு படத்திலும் நாயகனுக்கு எந்த அளவிற்கு முக்கியதுவம் வழங்கப்படுமோ அதே அளவிற்கு சந்தானத்தின் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியதுவம் கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபபத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பலப் படங்கள் வெற்றியடையக் காரணமாக சந்தானத்தின் காமெடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம் அதனைத் தொடர்ந்து படங்களில் கதையின் நாயகனாகவே நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் காமெடி நடிகராக நடித்த போது படங்கள் எப்படி வெற்றிப் பெற்றதோ அதே போல இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியப் பிறகு படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்படி நடிகர் சந்தானம் நாயகனாக நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதை தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சந்தானத்தின் புதுப் படத்தின் டைட்டில் லவ் பைட்:

அதன்படி பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நடிகர் சந்தானத்தின் படத்தை தயாரிக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அபரிமிதமான திறமை கொண்ட திரு. சந்தானம் அவர்களும், எங்கள் நிறுவனத்தின் இயக்குனரான செல்வின்ராஜ் சேவியர் அவர்களுடன் இணைந்து  எங்களின் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படம், அற்புதமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் துணையுடன், மிகுந்த கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமையும் இந்த லவ் பைட் படம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பர்த்டே பாய் சந்தீப் கிஷனுக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சிக்மா படக்குழு!

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி