RJ Balaji: ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை… இன்னும் பத்து நாளில் கருப்பு பட அப்டேட் வரும் – ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ!

RJ Balaji About Karuppu Movie: தமிழ் பிரபல இயக்குநராகவும், நடிகர்கவும் இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம்தான் கருப்பு. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆர்.ஜே. பாலாஜி, கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

RJ Balaji: ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... இன்னும் பத்து நாளில் கருப்பு பட அப்டேட் வரும் - ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ!

கருப்பு படம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி

Updated On: 

09 Mar 2026 18:19 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்கியுள்ள நிலையில், சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளனர். இந்த ஜோடியாக கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்திற்கு பின் சூர்யா நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” (Vishwanath and Sons) படத்தின் ரிலீஸ் எப்போது என அறிவிக்கப்பட்ட நிலையிலும், கருப்பு திரைப்படத்தன் ரிலீஸ் எப்போது என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடிகர் சூர்யாவுடன் இப்படத்தில் தீர்சிகா, ஷிவதா, சுவாசிக்கா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி மற்றும் ஆர்.ஜே.பாலாஜியும் இதில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன், திரில்லர் மற்றும் தெய்வீகம் போன்ற கலவையாக தயாராகியுள்ளது.

அந்த வகையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதிலிருந்து இதுவரை 1 பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி அதில், கருப்பு படத்தின் அப்டேட் இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு வரும் என்றும். ஏப்ரல் 10ம் தேதியில் கருப்பு ரிலீஸ் ஆகாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷின் டி56 படத்தில் நடிக்கும் உறியடி பட நடிகர்? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து போட்ட பதிவு!

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம்:

அந்த வீடியோவில் ஆர்.ஜே.பாலாஜி, “கருப்பு படத்தின் வேலையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். சூர்யா சார் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்துடன் இருக்கிறீங்கன்னு தெரியும். நீண்ட நாள் காத்திருப்பாள் இப்படம் இருக்கிறது, நானும் 2 வருடமாக பணியாற்றியிருக்கிறேன். உங்களின் காத்திருப்பு எல்லாமே நிச்சயம் ஒர்த்தாக இருக்கும். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். நிச்சயம் ஏப்ரல் 10ம் தேதியில் கருப்பு ரிலீஸாகவில்லை. மேலும் இணையத்தில் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை இது போன்று தேவையில்லாத வதந்திகள் பரவுகிறது. அனைவரையும் திருப்தி படுத்தும் படமாக இது இருக்கும். விரைவில் அப்டேட்டுடன் சந்திக்கிறேன்” என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காதல் தோல்வியின் போது ரக்‌ஷித் ஷெட்டியின் படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன் – கென் கருணாஸ்

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி பேசிய வீடியோ பதிவு:

நடிகர் சூர்யாவின் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து கிட்டத்தட்ட, 8 மாதங்கள் கடந்துள்ளது. ஆனாலும் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இது அஜித் குமாரின் வலிமை மற்றும் விடாமுயற்சி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டுவருவது போலவே மாறிவிட்டது. பல ரசிகர்கள் கருப்பு ரிலீஸ் எப்போது ? என போஸ்டர் அடித்தும் கேள்விகளை கேட்டுவருகின்றனர். அந்த வகையில் இந்த 2026 மார்ச் இறுதிக்குள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..