எனது முந்தையப் படங்களை விட 10 மடங்கு கருப்பு சிறப்பாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி
RJ Balaji Talks About Karuppu Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படம்
தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டே வெளியாகும் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் தற்போது வருகின்ற மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படம் குறித்தும் படத்தில் நடித்தவர்கள் குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இந்த கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து இதுவரை 3 சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அளித்த சமீபத்திய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
எனது முந்தையப் படங்களை விட 10 மடங்கு கருப்பு சிறப்பாக இருக்கும்:
நான் தற்போது இயக்கு உள்ள சூர்யா சாரின் கருப்பு திரைப்படம், எனது முந்தைய படத்தை விட ஏறக்குறைய 10 மடங்கு பிரம்மாண்டமானது. அப்படியிருக்கையில், இது எளிதாக இருக்கும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? ‘நாங்க நாலு பேரு’ பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை. சூர்யா சார் ஒரு சூப்பர்ஸ்டார். அவர் தன்னுடன் கொண்டுவரும் அந்தத் தனித்துவமான ஆளுமைத் தன்மை அபாரமானது. அவர் நூறு பேருக்கு மத்தியில் நடந்து வரும்போது, பின்னணி இசை (BGM) இல்லாமலே அது மிகவும் ‘மாஸாக’த் தெரியும். நாங்கள் முதலில் தீபாவளி வெளியீட்டிற்கு முயற்சி செய்தோம். பின்னர் பொங்கல் வெளியீட்டிற்கு முயன்றோம். ஆனால் பொங்கல் சமயத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதாக இருந்தது. அதன் பிறகு, கோடைக்காலத்தின் உச்சத்தில் தான் எனது படம் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அந்தத் தர்பூசணி காட்சிக்கு முன்னோடி (OG) சூர்யா சார் தான் என்றும் தெரிவித்து இருந்தார்.
Also Read… ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ!
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
#RjBalaji‘s Latest Interview for #Karuppu 🔥:
• I’m doing a Suriya sir film that is almost 10 times bigger than my previous film.. How do I expect it to be easy..?
• Naanga Naalu Peru Song is not in the film..
• Suriya sir is a superstar.. The kind of presence he brings along… pic.twitter.com/9iyo7X98GY— Laxmi Kanth (@iammoviebuff007) April 17, 2026
Also Read… அரசன் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் அமீர் மற்றும் கிஷோர் – வைரலாகும் போட்டோ