தனுஷ் 56 படம் எந்த மாதிரியான கதை தெரியுமா? வைரலாகும் தகவல்

Dhanush and Tamizharasan Pachamuthu Movie Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது தனுஷின் 56-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தனுஷ் 56 படம் எந்த மாதிரியான கதை தெரியுமா? வைரலாகும் தகவல்

தனுஷ்

Published: 

08 May 2026 15:37 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக இவரது நடிப்பில் கர படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடந்த 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் தனுஷ் தற்போது தனது 55-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது அடுத்தடுத்தப் படங்களை இயக்குநர்கள் தமிழரசன் பச்சை முத்து, மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதில் யாருடைய படத்தில் அவர் முதலாவதாக நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் அது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனுஷ் 56 படம் எந்த மாதிரியான கதை தெரியுமா?

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக லப்பர் பந்து என்ற சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷின் 56-வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம்இப்படம் மதுரையை களமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் நாடகம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை இயக்கி முடித்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… RJ Balaji: கருப்பு பட ட்ரெய்லர் ரெடி.. ஆனால் அரசியல் குழம்பங்கள் பெரிதாக இருக்கிறது – திடீரென வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… LIK: 25 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி