தலைவர் 173 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர்? வைரலாகும் தகவல்
Thalaivar 173 Movie Update: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது வில்லன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தலைவர் 173
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கூலி படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தினை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த படம் ஜெயிலர் 2. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இரண்டாவது பாகம் உருவாகி வந்தது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் இந்த ஜெயிலர் 2 படம் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தாக உருவாக உள்ள படம் தலைவர் 173. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளும் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் சர்ச்சைகள் இருந்து வந்தாலும் மறுபக்கம் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
தலைவர் 173 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர்?
முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பிறகு அந்தப் படத்தில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தெலுங்கு சினிமாவில் படத்தை இயக்க சிபி சக்ரவர்த்தி முன்பணம் வாங்கி பிறகு படம் தொடங்காமல் போனது.
இந்த நிலையில் அந்தப் படக்குழுவினர் தங்களது படத்தின் பிரீ புரடெக்ஷன் செலவுகளை சிபி சக்ரவர்த்தி ஏற்க வேண்டும் என்று ஒரு பிரச்சனையை கிளப்பினர். இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவது உறுதியானால் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக இயக்குநர் சங்கர் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் லீக்: எடிட்டர் மீது நடவடிக்கை!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Thalaivar173 – According to Valaipechu, director #Shankar is reportedly set to play a villain if Cibi directs..😮💥 With Simran or Shobana as the female lead and a cameo by #KamalHaasan..👀
— Laxmi Kanth (@iammoviebuff007) April 24, 2026
Also Read… அர்ஜுன் மற்றும் முகுந்தன் நடிக்கும் புது பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? அறிவிப்பு இதோ!