KH X RK Movie: ரஜினிகாந்த்-கமல்ஹாசனின் கூட்டணி படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயண்ட்- நாளை வெளியாகும் சிறப்பு அப்டேட்!

Superstar Rajinikanth - Kamal Haasan Alliance Movie : தமிழ் சினிமாவின் முக்கிய இரு தூண்களாக இருந்துவருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் குறித்த தேதியையும் அறிவித்துள்ளது.

KH X RK Movie: ரஜினிகாந்த்-கமல்ஹாசனின் கூட்டணி படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயண்ட்- நாளை வெளியாகும் சிறப்பு அப்டேட்!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படம்

Updated On: 

19 Feb 2026 19:33 PM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகர்களாகவே படங்களில் நடித்துவருபவர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவர்கள் இருவருமே 70ஸ் காலகட்டத்தில் ஒன்றாக படங்ககளில் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் முதல் படத்திலே கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துதான் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 1975ம் ஆண்டில் வெளியான “அபூர்வ ராகங்கள்” (Apoorva Raagangal) என்ற படத்தின் மூலம் இயக்குநர் கே. பாலச்சந்தரால் (K. Balachander) சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். இவர் இந்த படத்திலிருந்து கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் நடித்துவந்த நிலையில், கிட்டத்தட்ட பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர். பின் சில காரணங்களால் இவர்கள் இருவருமே இணைந்து நடிக்கவில்லை. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் ஏங்கிவந்தனர்.

அந்த விதத்தில் இவர்கள் இருவரின் கூட்டணி, கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தை “ரெட் ஜெயண்ட்” நிறுவனம் (Red Giant) தயாரிக்கவுள்ள நிலையில், இப்படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் மதியம் 12:07 மணியளவில் வெளியாகும் என புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதியிலும் புது அப்டேட் வெளியாகும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என் மகன் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்காக எந்த சிபாரிசும் செய்தது இல்லை – சிவகுமார்

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு குறித்த எக்ஸ் பதிவு:

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. இவர்களின் பிரம்மாண்ட கூட்டணி திரைப்படத்தை எந்த இயக்குநர் இயக்கவுள்ளார் என கேள்விகள் எழுந்துவந்து. அந்த வகையில் இவர்களின் கூட்டணி திரைப்படத்தை, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் 2 மற்றும் 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக ரஜினிகாந்துடன் 3வது முறையாக இவர் இணையும் நிலையில், கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணைவார்கள். இந்த கூட்டணி படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில், 90ஸ் காலகட்டத்தில் நடப்பதுபோன்ற கதையில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் திருமணம் – அட இந்த பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களா?

இவர்களின் கூட்டணி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் இரு பெரும் நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், கிட்டத்தட்ட ரூ 600 முதல் 650 கோடி பொருட்செலவில் தயாராகவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2027ம் ஆண்டு தொடங்கும் நிலையில், 2028ம் ஆண்டில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். ரஜினிகாந்த் தற்போது தலைவர் 173 படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், இதையடுத்து இந்த கூட்டணி படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!