ராம் சரண் பர்த்டே ஸ்பெஷல்… பெத்தி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

Peddi Pehelwan (Tamil) | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தில் இருந்து தற்போது க்ளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு உள்ளது.

ராம் சரண் பர்த்டே ஸ்பெஷல்... பெத்தி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

பெத்தி

Published: 

27 Mar 2026 11:03 AM

 IST

தெலுங்கு சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் மெகா ஸ்டார் என்று ரசிகர்களாலும் பிரபலங்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரது மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார் ராம் சரண். கடந்த 2007-ம் ஆண்டு சிறுத என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் ராம் சரண். அதனைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான மஹதீரா படம் அவரை தெலுங்கு சினிமா ரசிகர்களை தாண்டி பான் இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை பெற வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலில் எழுதி இயக்கி இருந்த நிலையில் ராம் சரணின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது மஹதீரா. இந்தப் படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி இதுவரை தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரண் நடிப்பில் இதுவரை வெளியான நாயக். ப்ரூஸ்லீ, ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா என பலப் படங்கள் ராம் சரண் நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ராம் சரண் இன்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள பெத்தி படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பெத்தி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு:

இன்று நடிகர் ராம் சரணின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பெத்தி படக்குழு வெளியிட்டுள்ள கிளிம்ஸ் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா எழுதி இயக்கி உள்ள நிலையில் ராம் சரண் உடன் இணைந்து நடிகர்கள் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யென்னு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி

பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..