யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்தது பவர் ஹவுஸ் பாடல் – வைரலாகும் போஸ்ட்

Powerhouse - Official Lyric Video | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. முன்னதாக இந்தப் படத்தில் இருந்து பவர் ஹவுஸ் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ தற்போது 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்தது பவர் ஹவுஸ் பாடல் - வைரலாகும் போஸ்ட்

பவர் ஹவுஸ் பாடல்

Published: 

09 Aug 2025 18:51 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் அமீர் கான், சௌபின் ஷாகிர், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா என பான் இந்திய நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. நேற்று கேரளா மற்றும் தமிழ் நாட்டில் டிக்கெட் புக்கிங் ஓபனாகி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் திரையரங்குகளில் டிக்கெட் வாங்க முண்டியடித்து செல்லும் காட்சிகள் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் பவர் ஹவுஸ் பாடல்:

இந்த நிலையில் கூலி படத்தில் இருந்து முன்னதாக பவர் ஹவுஸ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த பாடல் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடகர்கள் அறிவு மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடலை அறிவு எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி பாடல் வெளியானதில் இருந்தே தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதன் காரணமாக யூடியூபில் தற்போது 20 மில்லியன் பார்வைகளை இந்த பவர் ஹவுஸ் பாடலின் லிரிக்கள் வீடியோ பெற்றுள்ளது. இது குறித்து படக்குழு தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Also Read… தசாவதாரம் படத்தில் கமல் ஹாசனுக்கு உதவிய ஸ்ருதி ஹாசன் – என்ன செய்தார் தெரியுமா?

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அனிருத் சினிமாவிற்கு வர நான் காரணம் இல்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விசயம்!