ரவி மோகனின் ஜீனி படம் இந்த ஆண்டில் நிச்சயமாக வெளியாகும் – தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ்

Ravi Mohans Genie Movie Release Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் உருவாகி வருகின்றது.

ரவி மோகனின் ஜீனி படம் இந்த ஆண்டில் நிச்சயமாக வெளியாகும் - தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ்

ஜீனி

Updated On: 

28 Feb 2026 20:48 PM

 IST

தமிழ் சினிமாவில் சுமார் 23 ஆண்டுகளாக நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேர்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இறுதியாக நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படத்தில் ரவி மோகன் நாயகனாக நடிக்கவில்லை மாறாக வில்லனாக நடித்து இருந்தார். இதில் நடிகர் ரவி மோகனின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ள படம் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து மூன்று படங்கள் உருவாகி வருகின்றது.

இதில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் ஃபேண்டசி ட்ராமாவாக உருவாகியுள்ள படம் ஜீனி. இந்தப் படத்தை இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் ஜீனி படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் ரவி மோகனுடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் மகள் குஷ்மிதா கணேஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரவி மோகனின் ஜீனி படம் இந்த ஆண்டில் நிச்சயமாக வெளியாகும்:

அதன்படி குஷ்மிதா கணேஷ் வேல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் பேசியதாவது, ரவிமோகனின் ஜீனி எங்கள் தயாரிப்பில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும், இதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன். வெளியீட்டுத் தேதி பற்றி நீங்கள் தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டும், ஆனால் அது நிச்சயமாக இந்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Thaai Kizhavi: ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு? – எக்ஸ் விமர்சனங்கள் இதோ!

இணையத்தில் வைரலாகும் குஷ்மிதா கணேஷ் பேச்சு:

Also Read… சிலம்பரசன் – விஜய் சேதுபதியின் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும் – அரசன் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

Follow Us
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்
இந்திய சாதி அமைப்பை உள்வாங்கிய AI.. எழும் கவலைகள்..
இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..