பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு – வைரலாகும் தகவல்

Boys Movie Re Release Update: தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பாய்ஸ். இந்தப் படத்தினை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் முடிவு செய்துள்ளதாக சினிமா வடாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு - வைரலாகும் தகவல்

பாய்ஸ்

Published: 

27 Mar 2026 16:44 PM

 IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாய்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் பல புதுமுக நடிகர்களை இயக்குநர் சங்கர் அறிமுகம் செய்து வைத்து இருந்தார். இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆன நடிகர்கள் பலர் தற்போது சினிமாவில் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தின் மூலமாக சித்தார்த், பரத், எஸ். தமன், மணிகண்டன், நக்குல் மற்றும் ஜெனிலியா ஆகியோர் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆகி இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்வேதா, அமண்டா, சிந்துரி, ரேஷு, விவேக், ரவி பிரகாஷ், அனிதா ரத்னம், ஏ.வி. ரமணன், ஜானகி சபேஷ், இளவரசு, கலைராணி, சுபாஷினி, ரவிராஜ், கே.பி.மோகன், கமல் சோப்ரா, புவனேஸ்வரி, சிட்டி பாபு, மனோபாலா, டெல்லி குமார், சாலமன் பாப்பையா, ஏ.சி.முரளி மோகன், சூர்யகாந்த், ராஜன், செந்தில் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு:

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய அளவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்வதை படக்குழு வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி தற்போது பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ramayana: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

Follow Us
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு