இயக்குநர் ஹரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த நடிகர் பிரசாந்த்

Prashanth logged a complaint against Director Hari : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஹரி. இவர் மீது நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

இயக்குநர் ஹரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த நடிகர் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் - இயக்குநர் ஹரி

Published: 

13 Apr 2026 15:18 PM

 IST

தமிழ் சினிமாவில் ரூரல் காமெடி செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் பாணியில் படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநராக இருப்பவர் இயக்குநர் ஹரி. இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து இருந்தார். படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. அந்த வகையில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இவரது இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால் மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம், யானை ஆகியப் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இறுதியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் ஹரி. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்தின் 55-வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதனைத் தொடர்ந்து படத்தின் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஹரிக்கு எதிராக புகார் அளித்த நடிகர் பிரசாந்த்:

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட, பிரசாந்த் மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியிலான திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காகச் செலவிடப்பட்ட முன்பணம் மற்றும் முன் தயாரிப்புச் செலவுகளைத் திரும்பப் பெறுவதற்காக, பிரசாந்தும் அவரது தந்தையும் இயக்குனர் ஹரிக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், முன்பணத்தை மட்டுமே திரும்ப அளிக்க இயலும் என்றும், முன் தயாரிப்புச் செலவுகளைத் திரும்பத் தர இயலாது என்றும் ஹரி தெரிவித்துள்ளார். இதனால், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது என்று தகவல்கள் வெளியகி உள்ளது.

Also Read… ரன் படத்தின் ரீ ரிலீஸ் எப்போது? தேதியை வெளியிட்ட மாதவன்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… Mamitha Baiju: சரியான முறையில் படத்தைக் கண்டு மகிழ்வோம் – ஜன நாயகன் படம் குறித்து மமிதா பைஜூ!

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?