Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhi Stalin: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இந்தப் படத்தின் சில கட்சிகளைப் பார்த்தகாவும் படம் நிச்சயமாக அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கூலி படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2025 15:26 PM

தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin). இவரை அரசியல்வாதியாக மக்களுக்கு தெரியும் முன்பு தயாரிப்பாளராகவும் நடிகராகவுமே ரசிகர்களுக்கு முதலில் அறிமுகம் ஆனார். அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் ஒரு கேமியோ ரோலில் நடித்து முதன்முதலில் திரையில் தோன்றினார். அதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் உதநிதி ஸ்டாலின். இந்தப் படத்தில் உதய் மற்றும் சந்தானத்தின் காம்போ ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதிம் கலகத்தலைவன், கண்ணை நம்பாதே மற்றும் மாமன்னன் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். இதில் இறுதியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த மாமன்னன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்:

இந்த நிலையில் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது 50 வருடங்களைக் கடந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி பதிவு ஒன்றை உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது திரையுலகில் 50 வருடங்கள் நிறைவடைந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயா அவர்களை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாளை வெளியாகவுள்ள அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படத்தின் சிலக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சக்தி வாய்ந்த வெகுஜன பொழுதுபோக்கு படத்தை நான் முழுமையாக ரசித்தேன், மேலும் இது எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன். மேலும் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… பறந்து போ படத்திலிருந்து பிடிஎஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… தள்ளிப்போகிறது விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் ரிலீஸ்!