பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்
Dhanush 55 Movie Pooja Photos: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்போது தனுஷ் 55 படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று 04-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கிய நிலையில் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தனுஷ் 55 படக்குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கடந்த 2002-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய நடிகர் தனுஷ் தொடர்ந்து 24 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பலப் படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் தொடர்ந்து இளைஞர்களைக் கவரும் வகையில் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். பிறகு மிகவும் அழுத்தமான கதைகளை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்த நடிகர் தனுஷ் அதனைத் தொடர்ந்து பலப் பாடல்களை எழுதியும் பாடியுள்ளார். மேலும் தற்போது இயக்குநராகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றார்.
அதன்படி நடிகர் தனுஷ் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இயக்குநராகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். தொடர்ந்து இதுவரை நடிகராக தனுஷ் நடிப்பில் 53 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தனுஷ் இதுவரை மொத்தமாக 4 படங்களை இயக்கி உள்ளார். அதில் மூன்றில் அவர் நடித்து உள்ள நிலையில் ஒரு படத்தில் நடிக்காமல் இயக்குநராக மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது 54-வது படமான கர படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனது 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் தனுஷ் 55 படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியானது மேட் இன் கொரியா படத்தின் டீசர்
தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Lights on.
Camera ready.
A grand story sets into motion.Moments from the pooja of #D55 which took place yesterday 📸@dhanushkraja @mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr… pic.twitter.com/KqGdnK5tvM
— Wunderbar Films (@wunderbarfilms) February 5, 2026
Also Read… வெளியானது ராம் சரணின் பெடி படத்தின் புது ரிலீஸ் தேதி