தேசிய விருதிற்கு பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளது – இயக்குநர் ராம்குமார்

Director Ramkumar: 2023-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பார்க்கிங் படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருதிற்கு பிறகு தனக்கு இன்னும் பொறுப்புகள் அதிகரித்துள்ளதாக இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய விருதிற்கு பிறகு பொறுப்பு அதிகரித்துள்ளது - இயக்குநர் ராம்குமார்

ராம்குமார், சிலம்பரசன்

Published: 

04 Aug 2025 12:56 PM

2023-ம் ஆண்டிற்கான தேசிய விருதை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழ் சினிமாவில் பார்க்கிங் படத்திற்கு மட்டும் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Director Ramkumar Balakrishnan) இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன படத்திலேயே தேசிய விருதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வென்று இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக இவர் எப்போது படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்துள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்படி நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாள் அன்று இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில் நடிகர் சிலம்பரசனின் 49-வது படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

பொறுப்பு அதிகரித்துவிட்டதாக கூறிய இயக்குநர் ராம்குமார்:

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், முதல் படத்தின் வெற்றிக்கு பிறகே அடுத்தப் படத்தின் மீது பொறுப்பு அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்தேன். தற்போது தேசிய விருது கிடைத்தப் பிறகு அந்த பொறுப்பு இன்னும் அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். அதன்படி சிலம்பரசனின் படத்திற்கு கூடுதலாக பொறுப்பு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பேசிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா சிம்புவின் படம் முழுக்க முழுக்க கல்லூரி கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… கூலி படத்தில் நடிக்க இப்படிதான் சம்மதித்தேன் – நடிகர் அமீர் கான் ஓபன் டாக்

இணையத்தில் கவனம் பெறும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணாவின் பேட்டி:

Also Read… அஜித்திற்கு மங்காத்தா மாதிரி, நாகர்ஜுனாவிற்கு கூலி – நடிகர் ரஜினிகாந்த்