நடிகை சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து பட இயக்குநர்!

Director Tamilarasan Pachamuthu: நடிகை சுவாசிகா பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களில் நடிகையாக அறிமுகம் ஆகி நடித்து இருந்தாலும் அவர் கடந்த ஆண்டு லப்பர் பந்து என்ற படத்தில் நடித்தப் பிறகு தான் தென்னிந்திய மொழி சினிமாவில் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.

நடிகை சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து பட இயக்குநர்!

நடிகை சுவாசிகா

Published: 

18 Aug 2025 15:58 PM

கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி கோலிவுட் சினிமாவில் ஸ்போர்ஸ் ட்ராமாவாக வெளியான படம் லப்பர் பந்து. இந்தப் படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த ஆண்டு கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்த சிலப் படங்களின் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நாயகன்களாகவும் நடிகைகள் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி மற்றும் சுவாசிகா இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர். இவர்களின் நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், பால சரவணன், விஸ்வ மித்ரன், தேவதர்ஷினி, கீதா கைலாசம், ஜென்சன் திவாகர், ஜவஹர் சக்தி, டிஎஸ்கே, மௌனிகா செந்தில்குமார், கர்ணன் ஜானகி, வீரமணி கணேசன், சரத், ஏ.வி. தேவா, நிவாஷினி பி.யு., என்.கே.வெங்கடசேஷன், பிரதீப் துரைராஜ், பூபாலம் பிரகதீஸ்வரன், ஆதித்ய கதிர், விஜே தாரா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து இயக்குநர்:

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து நடிகை சுவாசிகா இல்லை என்றால் லப்பர் பந்து படமே வெளியாகி இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, படத்தின் கதை எழுதி முடித்து 6 மாதங்களா ஹரிஷ் கல்யாணின் மாமியார் கதாப்பாத்திரத்திற்கு நடிகர்களை தேடி வந்தோம்

யாரும் படத்தின் கதையை கேட்டுவிட்டு ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாரா என்று படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். சுவாசிகா மட்டும் இல்லை என்றால் இந்தப் படமே வெளியாகி இருக்காது. அவர் படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரத்தின் வலிமையை உணர்ந்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அந்த நிகழ்வில் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கும் மாமன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவு:

Also Read… 7 ஆண்டுகளை நிறைவு செய்தது நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம்!