கைதி 2 படத்தில் புது கதாப்பாத்திரங்கள் இருக்கு – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

Lokesh Kanagaraj: இந்திய சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற வார்த்தையை புழக்கத்தில் கொண்டு வந்தது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். இவரது படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் கைதி 2 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் புது அப்டேட்டை கொடுத்துள்ளார்.

கைதி 2 படத்தில் புது கதாப்பாத்திரங்கள் இருக்கு - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

லோகேஷ் கனகராஜ்

Published: 

25 Jul 2025 10:57 AM

கோலிவுட் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஒரு புதிய அத்யாயத்தை தொடங்கி வைத்தவர் இவர். இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்களான அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ் மற்றும் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள இந்த கூலி படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தற்போது இயக்கி வரும் கூலி படம் குறித்தும், அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் குறித்தும் பல தகவல்களை அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கைதி 2 படத்தில் இணையும் புது பெண் கதாப்பாத்திரங்கள்:

அந்த வகையில் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்சில் பெண் கதாப்பாத்திரங்களுக்கு பெரிய அளவில் முக்கியதுவம் இல்லை என்ற கருத்து சினிமா வட்டாரங்களில் நிலவி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதுகுறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது தான் அடுத்ததாக சினிமாட்டிக் யுனிவர்சிற்காக எழுதி வரும் கதையில் இரண்டு மூன்று பெண் கதாப்பாத்திரங்கள் இருப்பதாகவும், அது அடுத்ததாக தான் இயக்க உள்ள கைதி 2 படத்திற்கான கதாப்பாத்திரங்களாக இருக்கும் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஸ்கூல் கட்டடித்துவிட்டு நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் – ஃபகத் பாசில் ஓபன் டாக்

இணையத்தில் கவனம் பெரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வீடியோ:

Also Read… இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா? இணையத்தில் வைரலாகும் தேதி!