ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு!

Jana Nayagan Movie Censor Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு!

தளபதி விஜய்

Published: 

09 Feb 2026 13:49 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்று தென்னிந்திய சினிமா முழுவதும் மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்தது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியாது. இதனைத் தொடர்ந்து நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தான் தனது நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதை நடிகர் தளபதி விஜய் வெளிப்படையாக தெரிவித்த நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் தள்ளிப்போனது. தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் படத்தினை மறு ஆய்வு குழுவிற்கு படக்குழு தற்போது அனுப்பியுள்ளது.

ஜன நாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியது படக்குழு:

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, திட்டமிடப்பட்ட வெளியீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து, படத்தை மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதன் காரணமாக, பொங்கல் பண்டிகைக்குத் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை. தற்போது, ​​படக்குழுவினர் படத்தை மறுஆய்விற்காக அதிகாரப்பூர்வமாக மறுஆய்வுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

Also Read… வித் லவ் பட ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் அந்த காட்சி இல்லை – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Thaai Kizhavi: சிவகார்த்திகேயன் குரலில்.. ‘தாய் கிழவி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்